உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50, 000 பேருக்கு எதிராக வழக்கு

(UTV | கொழும்பு) –  இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,942 ஆக அதிகரித்துள்ளது.

அவ்வாறே இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50, 000 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81,220 பேர் கைது

பாண் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க கோரிக்கை

மேலும் 878 பேர் கைது !