உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,356 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,356 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்றும் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

   

Related posts

அதிவேக வீதிகளில் மீண்டும் களமிறக்கப்படும் STF

editor

உக்ரேனிய சுற்றுலா பயணிகள் இன்று இலங்கைக்கு

கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி – அமைச்சர் டக்ளஸ்.