உள்நாடு

தனிமைப்படுத்தலும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களும்

(UTV | கொழும்பு) – கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் அதிகாரப்பிரிவுக்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் இன்று (04) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லார் 3 மற்றும் பெரியகல்லார் 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.

   

Related posts

ஆட்கடத்தல் விசாரணைக்காக ஓமானுக்கு சென்ற இலங்கை அதிகாரிகள்

இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்