உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட விமானப் பயணிகளுக்கு விசேட சலுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று (05) திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு விமான பயணிக்கு பார்வையாளர் அரங்கிற்கு ஒரு நபரை மாத்திரம் அழைத்துச் செல்ல முடியும்.

சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த செயற்பாடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கட்டாய தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் விமான நிலையத்தின் வரியற்ற வர்த்தக தொகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்க முடியாமல் போன விமான பயணிகளுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நாள் முதல் ஒரு மாத காலத்திற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்குள்ள வரியற்ற விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கிச் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கேவலமான அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – சஜித் பிரேமதாச

editor

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு