சூடான செய்திகள் 1

தனமல்வில துப்பாக்கி சூடு சம்பவம் -விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள்

(UTV|COLOMBO) தனமல்வில பகுதியில் நேற்று(10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட பகுதியிலிருந்து சீ.சீ.டி.வி கமராவில் பதிவாகிய காட்சிகளை ஆதாரமாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் 42 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், 22 வயதான இளைஞனொருவர் காயமடைந்தார்.

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர், பிணை வழங்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

 

Related posts

தேசிய சுதந்திர முன்னணியின் மூன்றாவது தேசிய மாநாடு இன்று

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

“ரணில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை” சம்மந்தன்