இலங்கையின் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 8,287 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (06) காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி வரை இடம்பெறவுள்ளது.
2025 உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளருக்கான விருப்பு வாக்கினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இன்று செலுத்தினார்.
கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, குறித்த வாக்களிப்பு நிலையத்திற்கான தனது முதலாவது வாக்கினை காலை 07 மணிக்கு செலுத்தினார்.
இ.தொ.கா பொதுச்லெயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் வாக்களித்தப் பின்னர் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…
குறித்த நேரத்திற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, காலதாமதம் இன்றி பெறுமதிமிக்க தமது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, சேவல் சின்னத்தில் போட்டியிடும் எமது இ.தொ.கா வேட்பாளர்களை வெற்றிப்பெறச் செய்வதற்காக அனைவரும் வாக்கினை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை கொத்மலை பிரதேச சபையில், சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
ஜீவன் தொண்டமான்.