உள்நாடுவணிகம்

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் தற்போது வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 170 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், சந்தைகளில் விற்பனைக்காக சிவப்பு சீனி மாத்திரமே காணப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தினால் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

மேலும் 02 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த பொது மைதானத்தில் மர நடுகை நிகழ்வு!

editor

WhatsApp ஊடான நிதி மோசடி அதிகரிப்பு – அவதானமாக இருங்கள்

editor