உள்நாடுபிராந்தியம்

டேன் பிரியசாத் படுகொலை – துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர்களிடம் இருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களில் ஒருவர் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

குளிரூட்டியிலிருந்து வெளியேறிய புகையால் இருவர் உயிரிழப்பு!