விளையாட்டு

டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்

(UTVNEWS|COLOMBO) – இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, உபாதை காரணமாக தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது தென்னாபிரிக்க அணியுடன் இந்தியா விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் இருந்தே ஜஸ்பிரிட் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியிருக்கின்றார்.

ஜஸ்பிரிட் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆர்வத்தில் இருந்த பும்ராவுக்கு, காயம் தடைக்கல்லாக அமைந்துவிட்டது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

Related posts

முதலாவது T20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

editor

இலங்கை அணி சார்பில் அதிகளவு விக்கெட்களை வீழ்த்திய முதல் மூன்று இலங்கை வீரர்கள்…

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி!