சூடான செய்திகள் 1

டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம்

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையுடன், மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு தொற்று என சந்தேகிக்கப்படும் 48 ஆயிரத்து 669 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுள் நூற்றுக்கு 37 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டில் டெங்கு தொற்று என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 101 பேர் பதிவாகியிருந்தனர்.

இந்தநிலையில், நுளம்பு பெருகும் வகையில் உள்ள இடங்களை சுமத்தம் செய்து பேணிவருமாரு சுகாதார பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

11 உறுப்பினர்கள் பயங்கரவாத விசாரணை பிரிவிடம் ஒப்படைப்பு

இன்றைய வானிலை…

வெளிநாட்டில் உள்ள 810 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை