வகைப்படுத்தப்படாத

டெங்கு நோய் ஒழிப்பு திட்டம் : பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோய் ஒழிப்புத் திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று சுகாதாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை தேசிய கடமை என கருதி பொதுமக்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டெங்கு நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு நோய் தாக்கம் கூடுதலாக காணப்படும் மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சுமார் மூவாயிரம் பாடசாலை வளாகங்கள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

Prevailing windy conditions likely to continue – Met. Department

மழையுடன் கூடிய காலநிலை

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு