உள்நாடு

டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதிலிருந்து டீசல் இறக்கும் பணிகள் இன்று (03) ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பெட்ரோல், டீசல் கப்பலுக்கு முன்பணமும் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான ஒரு வருட நீண்டகால ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், முதல் தொகுதி எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

முச்சக்கர வண்டி கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது