உள்நாடு

டீசலின் விலை அதிகரித்தால் பஸ் கட்டணங்களை அதிகரிக்க நேரிடும்

(UTV | கொழும்பு) – டீசலின் விலை அதிகரித்தால் பஸ்கட்டணங்களை அதிகரிக்க நேரிடும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பது அவசியம் என்றாலும் தற்போதைய நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினை ஏற்படும். கடந்த காலங்களில் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் நாட்டின் தற்போதைய நிலையில் மக்கள் மீது சுமையை இறக்க வேண்டாம் என நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர்கள் பஸ் கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

எனினும் நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்குமானால் அது பெரிய பிரச்சினையாக மாறிவிடும். எனவே அரசாங்கம் மேலும் எரிபொருள் விலையை அதிகரிக்கும் என தான் நினைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

editor

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு