வகைப்படுத்தப்படாத

டிரம்ப் – கிம் ஜாங் உன் மீண்டும் சந்திப்பு

(UTV|AMERICA) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையிலான 2-வது சந்திப்பு வியட்நாமில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வாஷிங்டனில் நடந்த அமெரிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் டிரம்ப் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பழிவாங்குவது, எதிர்ப்பது, தண்டனை வழங்குவது போன்ற அரசியலை தவிர்த்து ஒத்துழைப்பு, சமரசம் மற்றும் பொதுநலன் அடிப்படையிலான அரசியலே சாத்தியப்படக் கூடியது. சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை, மனித கடத்தல்கள் ஆகியன அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்த போதிலும் இதுவரை முறையான சுவர் கட்டப்படவில்லை. நான் அதை கட்டுவேன். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் பெப்ரவரி  27 மற்றும் 28 ஆகிய நாட்களில் வியட்நாமில் மீண்டும் சந்திக்க உள்ளோம். பல ஆண்டுகளாக நமது தொழில்துறைகள், அறிவுசார் சொத்துக்கள், அமெரிக்க வேலைவாய்ப்புக்கள் மற்றும் வளங்களை குறிவைத்து சீனா நடத்தி வந்த திருட்டு, முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

 

Related posts

Hong Kong police evict protesters who stormed parliament

දුම්රිය ප්‍රවේශ පත්‍ර ගාස්තු ඉහලට ?

தேர்தல் விதி மீறிய 07 பேர் கைது