உள்நாடு

டிக்கோயாவில் சுமார் 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

(UTV|ஹட்டன் ) – ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஹட்டன் பொலிஸார், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அட்டன் டிக்கோயா நகரசபையினர் இணைந்து இன்று இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

டிக்கோயா – தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே கடந்த 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related posts

 இணையம் ஊடாக பணம் மோசடி- 8 பேர் கைது

மின் கட்டண அதிகரிப்பும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்

அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் சடலமாக மீட்பு!