கேளிக்கை

‘டாண்டவ்’ : வெப் சீரிஸ் சர்ச்சையில்

(UTV |  இந்தியா) – சமீபத்தில் வெளியான டாண்டவ் என்ற வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நடிகர்கள் சைஃப் அலிகான் மற்றும் டிம்பிள் கம்பாடியா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் டாண்டவ். இது கடந்த வாரம் அமேசன் ப்ரைமில் வெளியானது. இந்த தொடரை அலி அப்பாஸ் ஜாபர் என்பவர் இயக்கியிருந்தார். இந்த தொடரில் ஒரு இடத்தில் இந்து மதக் கடவுளை இழிவு செய்யும் விதமாகக் காட்சிப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து மத்திய தகவல்துறை ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளிக்க சொல்லி அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Related posts

அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

தனுஷுடன் இணையும் ரஷ்மிகா

அஜித் படத்தில் இணைந்த முன்னணி நகைச்சுவை நடிகர்