உள்நாடு

 டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் CID க்கு நீதிமன்றம் உத்தரவு

(UTV | கொழும்பு) –  டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் CID க்கு நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் உரிய அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டயானா கமகேவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான அறிக்கைகளை விரைவாக பெற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டயனா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி சிவில் செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், பிரித்தானிய குடியுரிமை காரணமாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் டயனா கமகே தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு தடை உத்தரவு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு