உள்நாடு

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?

ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அல்லது ஹிருணிக்கா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார். பின்னர் அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாளிப்பதாக அறிவித்து அரசில் இணைந்து கொண்டார். இரட்டைக் குடியுரிமை கொண்ட காரணத்தினால் டயனா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.  எனினும் முஜிபுர் ரஹ்மானை தேசியப் பட்டியலின் ஊடாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

 

Related posts

மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி தொடர்பாக விழிப்புணர்வுட்டுவதற்கு செயலமர்வும் ஒன்றுகூடலும் நீர்கொழும்பில் நடைபெறுகிறது

editor

அம்பாறை திருகோணமலை : அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக அதாஉல்லா!

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி பணம் பறித்த நால்வர் கைது

editor