வகைப்படுத்தப்படாத

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்

ஆப்பிரிக்க நாடான பெர்கினா பசோவிலுள்ள தேவலாயத்திற்கு விசமிகள் தீ வைத்தமையினால் அந்த தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 6 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்படி தாக்குதல்தாரிகளால், தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டிடங்கள் எரியூட்டப்பட்டதாகவும், வைத்திய நிலையமொன்று கொள்ளையிடப்பட்டதாகவும், நகர மேயர் ஊஸ்மன் ஸொங்கோ தெரிவித்துள்ளார்.

குறித்த தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேர்கினோ பசோவில் கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Related posts

Turbulence injures 35 on Air Canada flight to Sydney

எஸ்.எப் .லொக்கா கடத்திய சொகுசு ஜூப் வாகனம் மீட்பு!

கார்போஹைட்ரேட் செறிவு; “மலட்டு மாத்திரை” அல்ல ஆய்வாளர்