சூடான செய்திகள் 1

ஞானசார தேரர் தாக்கல் செய்த மனு இன்று

(UTV|COLOMBO)-பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு, ஹேமாகம மேல் நீதிமன்றில் இன்று ஆராயப்படவுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி இந்த மேன்முறையீட்டு மனுவை கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு இன்றைய தினம் தாம் ஜனாதிபதியை சந்திக்க எதிர்பார்ப்பதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஆராயப்பட உள்ள மேன்முறையீடு, பெரும்பாலும் ஞானசார தேரர் சார்பில் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பிலான மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

இலங்கையை சேர்ந்த தற்கொலைகுண்டுதாரிகள் பிலிப்பைன்சிற்குள் ஊடுருவல்

ஈரானின் ஆன்மீகத் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு