உள்நாடு

ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related posts

மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

editor

இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் – IMF எச்சரிக்கை

போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது