உலகம்

ஜெர்மனியில் மூன்றாவது அலை : பொதுமுடக்கம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலையும் பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாம் அலை கோரோனா பரவல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் ஈஸ்டர் திருநாள் நெருங்கி வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வலியுறுத்தியுள்ள ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஈஸ்டருக்கு முன்னதாக 5 நாட்கள் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது