வணிகம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும்

(UDHAYAM, COLOMBO) – ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீட்டினை செய்வதற்கு ஏற்ற வாய்ப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னெடுத்துச் செல்லப்படும் வர்த்தக சீர்த்திருத்தங்களை அமுல்ப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜி.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம் நிலையான வளர்ச்சியினை அடைய முடியும் என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் ஆலோசகர் நிக்கோஸ் செய்மிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை

முதல் Green Super Supermarket இலங்கையில்

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி