வகைப்படுத்தப்படாத

ஜி7 உச்சிமாநாட்டில் ட்ரம்ப்..

(UDHAYAM, COLOMBO) – பொருளாதாரத்தில் அதி உயர் நிலையில் உள்ள 7 நாடுகள் கலந்து கொள்ளும் ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் சிசிலி நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜேமனி, இத்தாலி, ஜப்பான், பிருத்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த உச்சிமாநாட்டில் ஜி7 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பூகோள காலநிலை தொடர்பான முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்த உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிருத்தானிய பிரதமர் தெரேசா மே உட்பட மேலும் நான்கு தலைவர்கள் முதன் முறையாக நேரடியாக சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த சந்திப்பின் போது, வட கொரியாவினால், சர்வதேசத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பாக ஜப்பான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

පාන් මිල ඉහළට

ஏழு மாடி கட்டிடம் இடிந்து விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

Europe heatwave expected to peak and break records again