உள்நாடு

ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானத்திற்கு தற்காலிகத் தடை

(UTV | ரியாத்) – சவுதி அரேபியா, ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

“இந்த மாதம் 28ம் திகதி ஜித்தாவிலிருந்து இலங்கை நோக்கி புறப்படவிருந்த விமானப் பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரசு எமக்கு அறிவித்துள்ளது.

புதிய திகதி தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றதும் நாம் உங்களுக்கு அறியத்தருகின்றோம்..” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாணவ பிக்குகளுக்கு பாலியல் வன்கொடுமை பொலிஸில் முறைப்பாடு

இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

editor

கொழும்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

editor