சூடான செய்திகள் 1

ஜாகிர் நாயக்கிடம் பொலிஸார் பல மணி நேரம் விசாரணை; நாடு கடத்தப்படுவாரா?

(UTVNEWS|COLOMBO) -மத போதகர் ஜாகிர் நாயக்கிடம் மலேசிய பொலிஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் அவர் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதற்கு அங்குள்ள இரு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மாநிலத்தில் அவர் நுழையவே தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜாகிர் நாயக்கிடம் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய விசாரணை, இரவு 7 மணி வரை நீடித்ததுள்ளது.

இதன் பின்னர் அவர் வேண்டுகோளை ஏற்று திங்கட்கிழமைக்கு விசாரணையை ஒத்தி வைப்பதாக மலேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவு இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

இவருக்கு ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தரக் குடியுரிமை அளித்துள்ளது.

இதேவேளை, அவருக்கான எதிர்ப்பு மேலும் வலுப்பட்டுள்ளது. ஜாகிரை நாடு கடத்த வேண்டும் என மலேசிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நான்கு இந்திய அமைச்சர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

சுற்றுலா நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த யானை உயிரிழப்பு

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு