வகைப்படுத்தப்படாத

ஜமால் கசோகி படுகொலையுடன் சவுதி இளவரசர் தொடர்பு

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் திகதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்து வந்தது.

அதற்கிடையே, ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த ஜனவரி மாதம் துருக்கி சென்றார். அங்கு அவர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி தற்போது தனது விசாரணை அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சவுதி மன்னர் முகமது பின் சல்மானின் ரகசிய பாதுகாப்பு படையினர் 15 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொலை சம்பவத்தில் சவுதி மன்னரின் பங்கு மிக அதிகமாக உள்ளதற்கான ஆதாரங்கள் வலிமையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரானில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கம்

පාසැල්වල අතර මැදි ශ්‍රේණි සඳහා සිසුන් ඇතුලත් කිරීමට අවස්ථාව

மஸ்கெலியாவில் லொறி விபத்து இருவர் காயம்