உலகம்

ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவுகோளில் நிலநடுக்கம்

(UTV|கொழும்பு) – ஜப்பான் நாட்டின் கிழக்கு கடற்கடை பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ஹோன்ஷு தீவின் மியகி மாகாணம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் பெருங்கடலில் 41 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்பதுடன், ஆனால், நிலநடுக்கத்தின் தாக்கம் சற்று குறைவாக இருந்த காரணமாக ஜப்பானில் எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Related posts

டிக்டாக் தொடர்ந்தும் சிக்கலில்

கனடா பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கை தமிழர்கள்

editor

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 95,735 பேருக்கு தொற்று