உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இன்று (மே 31) பிற்பகல் ஜப்பானின் வடக்கே அமைத்துள்ள ஹொக்கைடோவில் 6.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் ஹொக்கைடோவின் கிழக்கு கடற்கரையில் இருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. குஷிரோ, ஷிபெச்சா, ஹொன்ஷு ஆகிய நகரங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

நிலநடுக்கம் பல பகுதிகளில் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றன, ஆனால் இதுவரை யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை

Related posts

நீர்மூழ்கி ஏவுகணைக் கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

புதிதாக பரவும் ‘Monkey Pox’