ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குறித்த நபர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வைத்து அபே சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
