சூடான செய்திகள் 1

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்

(UTVNEWS  |COLOMBO) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட தெரிவுக்குழுவினை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை

ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநர்கள் ஐவர் நியமனம்