அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,

இந்த தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கட்சியின் அங்கீகாரம் இன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவோர் இருந்தால் உடனடியாக அந்த நபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

போக்குவரத்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பம்

மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்ற தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

editor

NPP ஒரு நியாயமற்ற சர்வாதிகார சக்தி – றிஷாட் எம் புகாரி

editor