உலகம்

ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு!

நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார்.

அதன்படி, செனட்டர் ஜே.டி.வான்ஸ் அவரது போட்டித் துணையாக முன்மொழியப்பட்டுள்ளார்.

அண்மையில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்ட தேர்தல் பேரணியின் பின்னணியில் குடியரசு கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் காதில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் உளவுத்துறையின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேக நபர் 20 வயதான தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Related posts

கலிபோர்னியா காட்டுத் தீ – அவசரகாலநிலை பிரகடனம்

இத்தாலியில் நாடுதழுவிய முடக்க செயற்பாடுகள் அமுல்

பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் – 300 இற்கும் மேற்பட்டோர் பலி

editor