சூடான செய்திகள் 1

ஜனாதிபதிக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி

(UTV |COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) தள்ளுபடி செய்தது.

மன நலக்கோளாறு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் அத்தியாயத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக என்பது தொடர்பில் கண்டறிய மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றினை ஆரம்பித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு மேற்செல் எனும் நீதிப்பேராணை (மென்டாமுஸ் ரிட்) கட்டளையிடுமாறு தக்சிலா ஜயவர்தனவின் சார்பில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் குறித்த மனு கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அழைப்பு

டிலந்த மாலகமுவ காவல்துறையில்

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்