உள்நாடு

ஜனாதிபதி போட்டிக்கு களமிறங்கும் டலஸ்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் போது தாம் முன்னிலையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பாரம்பரிய பிளவுகள் அற்ற அமைதியான அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் நேர்மையான நோக்கத்துடன் செயற்படும் பரோபகார பாராளுமன்ற உறுப்பினர்களின் தளராத ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஹட்சன்

சாரதியை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்