2024 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகளை சமீபத்திய கணக்கு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஒப்புதல் இல்லாமல் 944 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஜனாதிபதி வழங்கக் கூடிய அறிவுறுத்தல்களின்படி மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய முடியும் என்று அது கூறுகிறது.
இருப்பினும், 2024 ஜூலை (31) முதல் டிசம்பர் (31) வரை பணிப்பாளர் சபையின் ஒப்புதல் இல்லாமல் இந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
நிலையான மற்றும் கால வைப்புத்தொகைகளில் முதலீடு செய்துள்ள மொத்தத் தொகை 944.7 கோடி ரூபா.
மேலும் பணிப்பாளர் சபை 2024 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே கூடியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
