அரசியல்உள்நாடுவணிகம்

ஜனாதிபதி நிதியத்தின் டிஜிட்டல் திட்டத்திற்கான இரண்டு NBQSA விருதுகள்

ஜனாதிபதி நிதியத்தின் புதிய நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் திட்டம், மதிப்புமிக்க NBQSA (National Best Quality Software Awards) கணினி திட்ட விருது வழங்கும் விழாவில் இரண்டு விருதுகளை வென்றதன் மூலம் அதன் சிறப்பை உறுதிப்படுத்த முடிந்தது.

அதன்படி, 2025 பிப்ரவரி 07 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஜனாதிபதி நிதியத்தின் குடிமக்கள் சேவைகளை நெறிப்படுத்திய புதிய டிஜிட்டல் அமைப்பு, குடிமக்கள் சேவைகள் பிரிவில் வெண்கல விருதையும், அரச துறையில் சிறந்த பாராட்டு விருதையும் பெற்றது.

இந்த இரட்டை விருதைப் பெறுவதன் மூலம், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு திறமையான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்க ஜனாதிபதி நிதியம் எடுத்த நடவடிக்கைகள் தேசிய அளவில்
அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

குறிப்பாக அரச துறையில் சிறந்த பாராட்டு விருதை பெற்றதன் மூலம் ஏனைய அரச நிறுவனங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலின் வெற்றி மற்றும் முக்கியத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

இதுவரை 424 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் முடங்கியது

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை தமிழில்

editor