வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி நாளை ரஷ்யா விஜயம்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ரஷ்யாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தில் பலதுறை சார்ந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், புதிய உற்பத்திகள், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தல், கலாசாரம் முதலான துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலான உடன்படிக்கைகள் அவற்றில் அடங்கும்.

இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவை வளர்த்து, பல்துறை சார்ந்து இருதரப்புகளும் அனுகூலம் பெறும் வகையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

Related posts

குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த பொலிஸ்- VIDEO

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்