அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான  வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

editor

களுத்துறை மாவட்டத்திற்கு நீர் வெட்டு