அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை) 1,745 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 711  முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 965 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 59 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு!

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப் பிரதி நிதி, பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

இன்று முதல் நெடுஞ்சாலை பயணிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம்

editor