அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 901 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரை) 901 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 427 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 450 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஒரு முறைப்பாடும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 23 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

சீனாவின் கொள்கலன்களை சோதனையிட தேவையில்லை

மன்னார் பள்ளமடு பிரதான வீதியில் விபத்து- சம்பவ இடத்தில் ஒருவர் பலி

எமது தேசத்தின் பெறுமையினை உலகறியச் செய்வோம் சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

editor