வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா

(UDHAYAM, COLOMBO) – சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழக வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகளை கௌரவிக்கும் முகமாக சக்யா பல்கலைக்கழக பாராட்டு விழா பிரதம அதிதியாக ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற சக்யா உயர் கல்வி நிறுவனத்தின் மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, விருதுகளையும், பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரஞ்சித் சியபலாபிட்டிய, சக்யா குழுமத்தின் தலைவர் பண்டார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சீன அரசின் அதிரடி உத்தரவு…

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்?

ETL STATES IT’S ROLE WAS MERELY AS A FREIGHT FORWARDER AND DENIES OWNERSHIP OF IMPORTED WASTE