உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்டத் தலைவர்கள் தொடர் கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

Related posts

எரிபொருள் விற்பனையில் பற்றி அவசர கோரிக்கை

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு சமர்ப்பிப்பு