சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஜப்பான் சென்றடைந்தார்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை ஜப்பான் சென்றடைந்தார்.

கடந்த சனிக்கிழமை அவர் இரண்டு நாட்கள் விஜயமாக இந்தியா சென்றிருந்த நிலையில், இன்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானிய பிரதமரது அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதி, 5 நாட்கள் தங்கி இருப்பார்.

இந்த காலப்பகுதியில் அவர் ஜப்பானிய பிரதமர், ஜப்பானின் மன்னர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மலிக் சமரவிக்ரம மற்றும் திலக் மாரப்பன உள்ளிட்ட தூதுக்குழுவும் ஜப்பான் சென்றுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

UPDATE-மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு