அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் இன்றைய தினம் (23) சந்தித்துள்ளார்.

தற்போது இரு தரப்புக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (22) பிற்பகல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக எஸ். ஜெய்சங்கர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

சுற்றுலா துறையில் ஏற்படப்போகும் புதிய மற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு குறித்து வெளியான தகவல்

editor

தெற்காசிய உயர் வணிக விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம்

editor