அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரகுமார பயணித்த விமானத்தில் நாமல்!

ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ, மாலைதீவு சென்றுள்ளார்.

தனிப்பட்ட விஜயத்துக்காக அவர் UL 101 விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் நேற்று காலை இந்த விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றார்.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

Related posts

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானம்.