உள்நாடு

ஜனாதிபதி அடுத்த மாதம் எகிப்து பயணம்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள COP 27 மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும், இந்த மாநாட்டில் மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் பங்கேற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். சிஓபி 27 மாநாட்டில் பங்குபற்றுவதற்கு மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் தீர்மானித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சர்வதேச ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு எரிக் சொல்ஹெய்மை ஜனாதிபதி அண்மையில் நியமித்தார்.

Related posts

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு