அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அது தொடர்பிலும் பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து அறிவுறுத்துவதும் இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது கடமைகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் நடவடிக்கைகளில் எந்த செல்வாக்கும் செலுத்தப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.

Related posts

சில மாவட்டங்களில் நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்

குடிவரவு – குடியகழ்வு திணைக்களம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்