உள்நாடுபிராந்தியம்

சோதனைச்சாவடி மீது வேன் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுரவில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரியவிலிருந்து ரஸ்நாயக்கபுர பகுதி நோக்கிச் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சோதனைச் சாவடியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன விபத்தில் உயிரிழந்தவர் கொட்டவெஹெர பகுதியைச் சேர்ந்த ரஸ்நாயக்கபுர பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 37 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஆவார்.

விபத்தின் போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் மற்றுமொரு நபரும் காயமடைந்துள்ளதுடன், மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்து தொடர்பாக வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர் மது அருந்தியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

நாட்டில் மேலும் 293 பேருக்கு கொரோனா உறுதி

ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது முஸ்லிம் காங்கிரஸ் காடையர்கள் தாக்குதல் – பொலிஸில் முறைப்பாடு பதிவானது

editor

கத்தி முனையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

editor