வகைப்படுத்தப்படாத

சுவையான சேமியா உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

சேமியா – 2 கப்,
பெரிய வெங்காயம் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
கொத்தமல்லித்தழை – சிறிது,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க :

கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 4,
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்.

 

செய்முறை :

சேமியாவை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்துகொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

அதில் வறுத்த சேமியாவை சேர்த்து 2 நிமிடம்  தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

Related posts

Tamil MPs to meet the president today

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய ஒருவருடன் எட்டு பேர் கைது

Cabinet approval to set up Prison Intelligence Unit